தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதிய பதவி: தமிழக பாஜக தலைவர் யார்?
- IndiaGlitz, [Sunday,September 01 2019]
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனும் கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான் அவர்களும், ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆளுநராக பண்டாரு தத்தாட்ரேயா அவர்களும், மகாராஷ்டிரத்தின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.வி.சேகர், இல.கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் புதிய தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.