சென்னையில் மோனோ ரயில் இயக்க தமிழக அரசு திட்டம்

  • IndiaGlitz, [Saturday,July 08 2017]

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ ரயில் வசதியில்லாத இடங்களில் மோனோ ரயில் தடம் செயல்படும் என தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக போரூர்-கத்திப்பாரா, போரூர்-வடபழனி ஆகிய வழித்தடங்களில் 20.68 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.3,267 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல்வழித்தடமும், வண்டலூர் முதல் வேளச்சேரி இடையேயான 22.80 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.3,135 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.6402 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்திய அரசின் அனுமதியை பெற்றது சிவகார்த்திகேயன் பட நிறுவனம்

புரமோஷன் கன்சல்டண்ட் என்ற பணியில் கோலிவுட் திரையுலகில் பல படங்களில் பணியாற்றிய ஆர்.டி.ராஜா, கடந்த ஆண்டு '24ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'ரெமோ' என்ற படத்தை தயாரித்தார்.

ரஜினி பிறந்த நாளை இன்று மாலை கொண்டாடும் சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி அன்று ரஜினி ரசிகர்கள் டிசம்பர் 12ஆம் தேதியை ஒரு முக்கிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் எழுதிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட்டின் போர்க்கள நாயகன் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

"தாதா" என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பெங்கால் டைகர் கங்குலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கமலின் 'விஸ்வரூபம்' குறித்து கருத்து கூறிய பாமக ராம்தாஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக சொல்லி கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவருடைய டுவீட்டில் அரசியல் இருக்கும்.