சென்னையில் மோனோ ரயில் இயக்க தமிழக அரசு திட்டம்

  • IndiaGlitz, [Saturday,July 08 2017]

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ ரயில் வசதியில்லாத இடங்களில் மோனோ ரயில் தடம் செயல்படும் என தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக போரூர்-கத்திப்பாரா, போரூர்-வடபழனி ஆகிய வழித்தடங்களில் 20.68 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.3,267 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல்வழித்தடமும், வண்டலூர் முதல் வேளச்சேரி இடையேயான 22.80 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.3,135 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.6402 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.