"எந்த மசோதாவும் மேற்கு வங்கத்திற்குள் நுழையாது" - முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்குவங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தெரிவித்திருந்தது.இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று பாஜக அரசு அறிவித்தது. அதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இன்று கராக்பூர் பகதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி,”தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். மேற்குவங்க மாநிலத்தில் நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை, மத்திய பாஜக அரசால், இங்கு எதையும் திணிக்கமுடியாது. நாட்டின் குடிமக்கனை நாட்டை விட்டு வெளியேற்றவும், அவர்களை அகதிகளாக ஆக்கவும் பாஜக அரசு நினைக்கிறது” என்று மம்தா பானர்ஜி சாடினார்.

 

More News

ஓடும் பேருந்திலேயே தாலி கட்டிய இளைஞர்.. வாணியம்பாடியில் ஒரு ஒருதலைக் காதல்

இதை எதிர்பார்க்காத அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து தாலிக் கயிற்றைக் கழுத்திலிருந்து வெளியே எடுத்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜெகன்,

அம்மனை அடுத்து முருகனை தரிசித்த நட்சத்திர காதல் ஜோடி!

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒன்றான இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் இன்று காலை கன்னியாகுமரியில்

இதுதான் 'தளபதி'யின் பவர்: அர்ச்சனா கல்பாதி டுவீட்

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாதி இந்த

பாலியல் குற்றவாளிகளிக்கு 3 வாரங்களில் தூக்கு அல்லது என்கவுண்டர்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கிடைக்க வருடக்கணக்கில் ஆவதால் தான் என்கவுண்டரில் முறைகளை மக்கள் ஆதரித்து வருவதாக கூறப்படுகிறது

சிக்கனமாக பயன்படுத்துங்கள்..தண்ணீரே இல்லை - ஆஸ்திரேலிய அரசு.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை தண்ணீர் பஞ்சம் சர்வதேச தலைப்பு செய்தி ஆனது.