நாடாளுமன்றத்திற்கு ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா? எம்பியான இளம் நடிகைகள் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
குற்றப் பின்னணி கொண்டு ஊழல் கறை படிந்த எம்பிக்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு வருவதை கேள்வி கேட்காதவர்கள், நாங்கள் அணிந்து வரும் உடைகள் குறித்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு இளம் கவர்ச்சி நடிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திரிணாமல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகைகள் மிமி சக்ரபோர்த்தி மற்றும் நடிகை நுஸ்ரத் ஆகியோர் தேர்தலில் அபார வெற்றி எம்பியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தங்களுக்கான அடையாள அட்டைகளை பெற்று நாடாளுமன்றம் முன் போஸ் கொடுத்தனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த உடை குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்து கருத்து கூறிய நடிகை மிமி சக்ரபோர்த்தி, ஒரு ஆண் எம்பி, ஜீன்ஸ் அணிந்து வந்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் இதையே ஒருபெண் செய்தால் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். குற்றப்பின்னணி உள்ளவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்து யாரும் விமர்சனம் செய்வதில்லை. கவலையும் படுவதில்லை., ஆனால் எங்களை போன்றவர்களை மட்டும் விமர்சனம் செய்கின்றனர் என்று தெரிவித்தார்.
அதேபோல் இதுகுறித்து நடிகை நுஸ்ரத் கூறுகையில், 'நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது என்னை நோக்கி கேள்வி கேட்டவர்கள் எனது வெற்றியை பார்த்து அமைதியாகினர். அதுபோல் நாடாளுமன்றத்தில் எனது பணியை பார்த்து எனது உடை குறித்து விமர்சனம் செய்தவர்களும் அமைதியாகிவிடுவார்கள்' என்று கூறினார்.
ஒருகாலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய முதியோர் இல்லம் பாராளுமன்றம் என்று கேலி செய்யப்பட்ட நிலையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் இளம் நடிகைகள் உள்பட இளைஞர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் பாராளுமன்றம் பரபரப்பாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout