ஜிவி பிரகாஷ்-சித்தார்த் படத்தின் டைட்டில் இதுதான்

  • IndiaGlitz, [Friday,March 08 2019]

'பிச்சைக்காரன்' பட இயக்குனர் சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று காலை வெளியாகவிருப்பதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது

இந்த படத்திற்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ரேஸ் வீர்ருக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல்கள் தான் இந்த படத்தின் கதை என்றும், அதனால்தான் இந்த படத்திற்கு டிராபிக் சிக்னல் குறித்த வண்ணங்கள் கொண்ட டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த டைட்டில் குறித்து நடிகர் சித்தார்த் கூறியபோது, 'ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வண்ணம் இருக்கும். இந்த படத்தில் வரும் கேரக்டர்களின் வண்ணங்கள்தான் இந்த படத்தின் டைட்டில் என்று கூறியுள்ளார்.

ரேஸ் வீரராக ஜிவி பிரகாஷூம், போலீஸ் அதிகாரியாக சித்தார்த்தும் நடிக்கும் இந்த படத்திற்கு பிரசன்னகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.