'கமல்ஹாசன் 232' படம் குறித்த பரபரப்பான அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் 232வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வெளியாகும் டீசரில் டைட்டில் வெளியாகும் தேதி தெரியும். இதனால் கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்
இந்த படத்தின் படப்பிடிப்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
Title announcement teaser of #KamalHaasan232 will be released on Saturday 7th November, at 5pm! pic.twitter.com/BdxE51zsgd
— meenakshisundaram (@meenakshinews) November 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments