சூரிய ஒளியில் இயங்கும் நடமாடும் இஸ்திரி கடை… 9 வகுப்பு மாணவியின் சர்வதேச சாதனை!!!

  • IndiaGlitz, [Friday,November 20 2020]


 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் வினிஷா உமாசங்கர் எனும் மாணவிக்கு சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஸ்வீடன் நாட்டு மாணவர் பருவநிலை எனும் விருது வழங்கி கவுரவிக்கப்ட்டு இருக்கிறது. இவர் சூரிய ஒளியினால் இயங்கும் நடமாடும் இஸ்திரி கடையை உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் துணியை இஸ்திரி செய்வதற்கு பெரும்பாலும் கரியைப் பயன்படுத்துவதுதான் வழக்கம். அப்படி நாள்தோறும் கரியைப் பயன்படுத்தி வெப்பத்தை உருவாக்குவதன் மூலம் அது மரங்களின் அழிவிற்கும் காற்று மாசுபாட்டிற்கும் வழிவகுக்கும் என்பதை உணர்ந்த 9 வகுப்பு படிக்கும் 14 வயது வினிஷா சூரிய ஒளியினால் இயங்கும் இஸ்திரி பெட்டியை உருவாக்கி இருக்கிறார். இதனால் பல விருதுகளுக்கு தற்போது சொந்தக்காரராகவும் மாறி இருக்கிறார்.

சோலார் பேனல்ட் மூலம் சூரிய ஒளியை உள்வாங்கி அதை பேட்டிரிகளில் சேமித்து நேரடியாக இஸ்திரிப் பெட்டியில் பயன்படுத்த முடியும். இப்படி செய்வதனால் நாள்தோறும் கரி வாங்குவதற்கு செலவழிக்கும் பணத்தையும் தொழலாளர்கள் மிச்சப்படுத்தலாம். மேலும் இயற்கை மாசுபடுவதும் தடுக்க முடியும். இவரது முயற்சியை பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு அப்துல் கலாம் எங்க் லேண்ட் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தற்போத சர்வதேச அளவில் வழங்கப்படும் ஸ்வீடன் நாட்டு விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.