அதிகாலை 4 மணி காட்சி தேவையில்லை: திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி..!

  • IndiaGlitz, [Tuesday,October 17 2023]

அதிகாலை 4 மணி காட்சி தேவை இல்லை என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்து என்றும் 4 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு முதல் காட்சியை அனுமதிக்கலாம் என்றும் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்நாட்டில் 95% தியேட்டர்களில் ’லியோ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. ’லியோ’ படத்தை 6 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 8:00 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கட்டுப்பாடு இன்றி காட்சிகளை ஒளிபரப்பு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்க உள்ளது.

’லியோ’ திரைப்படத்திற்கு அரசின் அழுத்தம் சிறிதும் இல்லை, அரசு நெருக்கடி கொடுக்கிறது என்பது தவறான தகவல். தமிழ்நாடு அரசின் முடிவுக்கு கட்டுப்படுவோம். அதிக கட்டணம் வசூலித்தால் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காலை 7 மணி காட்சியால் பள்ளி அலுவலகம் செல்வோருக்கு இடையூறு இருக்காது, அலுவலகம் செல்வோர் காலை 7 மணிக்கு காட்சியை விரும்புகின்றனர்’ என்று தனது பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.