100 ஆண்டு தமிழ் சினிமாவில் இந்த படம் தான் பெஸ்ட் வசூல்: திருப்பூர் சுப்பிரமணியம்
- IndiaGlitz, [Friday,September 16 2022]
100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக வசூல் செய்த படம் இது தான் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
கோவையில் நடைபெற்ற ’விக்ரம்’ படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தில் கமல்ஹாசன் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு பேசியபோது, ‘கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 100 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலை குவித்த திரைப்படமாக ’விக்ரம்’ இருக்கிறது என்றும் அவர் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசிய போது, ‘நல்ல படத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்றும் அப்போது தான் அதிக நல்ல படங்கள் தமிழில் உருவாகும் என்றும் அவர் கூறினார். மேலும் நல்ல சினிமாவை கைவிட்டுவிடாதீர்கள். அற்புதமான இயக்குநர்களை கைவிட்டுவிடாதீர்கள் என்றும் நீங்கள் வாழ்த்தினால் எங்கள் வீட்டில் பொன்மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
நூறு வருட தமிழ் சினிமா வரலாற்றில், அதிக வசூல் செய்த No.1 திரைப்படம் - #Vikram #100DaysofVikram #thiruppur #Tiruppur#VikramRoaringSuccess #KgCinemas #KamalHaasan #LokeshKanagaraj pic.twitter.com/fvw1teu24e
— கடவுள் கமல்?? (@ulaganayagan1) September 16, 2022