தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது? முதல்வரை சந்தித்தபின் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

  • IndiaGlitz, [Thursday,July 08 2021]

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று சந்தித்த நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வரிடம் பேசினோம் என்றும் விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாகவும் கூறினார்.

முதல் கட்டமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுத்தாலும் நாங்கள் திரையரங்குகளை திறக்க தயாராக இருக்கிறோம் என்றும் அரசு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து திரையரங்குகளை திறப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே விரைவில் திரையரங்குகளை திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கும் என்றும் தமிழக அரசு அனுமதி வழங்கிய உடன் திரையரங்குகளில் திறப்போம் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டால் யாரும் ஓடிடி பக்கம் செல்ல மாட்டார்கள் என்றும் திரையரங்குகள் தற்போதி திறக்கப்படாததால் தான் தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் எத்தனை தொழில் நுட்பம் வளந்தாலும் திரையரங்குகள் தொழில் நிச்சயமாக அழியாது என்றும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

More News

அஜித் பாணியில் நிவேதா பெத்துராஜ்: வைரல் புகைப்படங்கள்

'ஒரு நாள் கூத்து' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு 'டிக் டிக் டிக்' 'சங்கத்தமிழன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்

இந்த கேள்வியை உங்க அம்மாகிட்ட கேட்கலாமே? நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நந்திதா!

'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நந்திதா, அதன்பின்னர் 'எதிர்நீச்சல்' 'முண்டாசுப்பட்டி' 'கலகலப்பு 2' உள்பட பல திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பதும்

தமிழ் நடிகர்களில் யாரும் செய்யாத சாதனையை செய்த சிம்பு!

தமிழ் நடிகர்களில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை சிம்பு செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு....! அதிமுக பிரமுகருக்கு ஜாமீன் மனு தள்ளுபடி...!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான, அதிமுக பிரமுகர் அருளானந்தத்தின் ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட விவகாரத்தில் ரஜினி, விஜய், அஜித் மெளனம் ஏன்? பிரபல இயக்குனர் கேள்வி!

ஒளிப்பதிவு சீர் திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுக்காமல் ரஜினி, அஜித், விஜய் மௌனம் காப்பது ஏன்? என பிரபல இயக்குனர் ஒருவர் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.