அமேசான் நிறுவனத்தால் மாஸ் நடிகர்களுக்கு ஆபத்தா? எச்சரிக்கும் திரையரங்குகள் சங்க தலைவர்!

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பால் 8 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்தது. ஆனால் பத்து சதவீதம் கூட பார்வையாளர்கள் வராததால் மீண்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன

மாஸ் நடிகர்களின் படங்கள் வந்தால் மட்டுமே திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் திரையரங்குகளின் நிதி நெருக்கடியை கணக்கில் கொண்டு அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து குடோன்களாக மாற்றி வருகின்றன

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட்டால் வரும் வருமானத்தை விட அதிக அளவு வாடகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இதே நிலை நீடித்தால் ஒற்றை திரையரங்குகள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிவிடும் என்றும், இதனால் சினிமா தொழிலுக்கும், மாஸ் நடிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் திரையிட்டால் கிடைக்கும் லாபத்தைப் போல இரண்டு மடங்கு வாடகை தரத் தயாராக இருக்கிறார்கள். இப்படி மாறினால் திரையரங்குகள் லாபகரமாக மாறும். ஆனால், திரைப்படங்கள் திரையிடத் திரையரங்குகள் இருக்காது.

கார்ப்பரேட் கம்பெனிகளின் மல்டிபிளக்ஸ் மட்டுமே இருக்கும். அப்போது தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். நடக்கப்போவது ஒன்றுமில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்தி, செலவுகளைக் குறைப்பதில் ஆர்வம் காட்டி, திரையரங்கு உரிமையாளருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுத்தால் மட்டுமே சினிமா தப்பிக்கும்.

இல்லையேல் திரையரங்கில் திரையிடாமல் வேறு தளத்தில் படங்கள் வெளியானால் நடிகர்களுக்கு எந்த ஸ்டார் பட்டமும் போட முடியாது. இந்தச் சம்பளமும் வாங்க முடியாது. ஆகவே, அனைவரும் ஒன்றுசேர்ந்து திரையரங்குகளைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். இதை நான் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவராக எழுதவில்லை. ஒரு சினிமா ரசிகனாக எழுதுகிறேன்.

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 

More News

ரூ.26 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டங்கள்… தமிழகத்தை சீர்ப்படுத்தும் எடப்பாடியார்!!!

அரியலூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சித் திட்டப் பணிகளைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்: வழக்கறிஞர் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது… காட்டத்துடன் உச்சநீதிமன்றம்!!!

டெல்லியில் 22 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நேற்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

சாலையில் நடந்து சென்றவர் மீது இடிந்து விழும் கட்டிடம்… பதற வைக்கும் வீடியோ!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் நடந்து சென்றவர் மீது புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேல்மாடி தூண் இடிந்து விழும் காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது

சத்யராஜ் மகள் சேரும் அரசியல் கட்சி இதுவா? ரஜினிக்கு சிக்கலா?

ஒவ்வொரு முறை சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் போது திடீரென நடிகர் நடிகைகள் ஒரு சில அரசியல் கட்சிகளில் சேர்ந்து பிரச்சாரம் செய்வார்கள் என்பது தெரிந்ததே