100% இருக்கை வாபஸ் பெற்றால்.... 'மாஸ்டர்' ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதி வழங்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டால் வரும் பொங்கல் திருநாளில் ’மாஸ்டர்’ திரைப்படம் மட்டுமே வெளியாகும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமின்றி இது குறித்த வழக்கு ஒன்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணை செய்யப்படுகின்றது
இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட அரசாணை வாபஸ் பெறப்படும் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் 100% இருக்கை அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் வரும் பொங்கல் திருநாளில் ’மாஸ்டர்’ திரைப்படம் மட்டுமே வெளியிடப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
இந்த அறிவிப்பால் சிம்புவின் ’ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளிவராதா? என்று அதிர்ச்சியில் சிம்பு ரசிகர்கள் உள்ளனர். ’ஈஸ்வரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து புரமோஷன் உள்பட அனைத்து பணிகளும் செய்து விட்ட நிலையில் தற்போது ’ஈஸ்வரன்’ திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com