'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று செய்திகள் கசிந்து வந்தாலும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் விஜய் ரசிகர்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியன் அவர்கள் சற்று முன்னர் ’ஜனவரி 13-ஆம் தேதி ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆவது உறுதி’ என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரனோ பாதிப்பிற்கு பின் வெளியாகும் மிகப் பெரிய படம் இதுதான் என்றும் அதற்காக தாங்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
முன்னதாக நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விஜய் நேரில் சந்தித்து ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக ஒத்துழைப்பு அளிக்கும்படியும் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments