கல்லூரி மாணவரை ஏமாற்றி ரூ.97 ஆயிரம் மோசடி செய்த இளம்பெண்: டிக்டாக்கால் விபரீதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
23 வயது கல்லூரி மாணவர் ஒருவரிடம் அன்பாக பேசி அவரை ஏமாற்றி 97 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்த இளம்பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ராமச்சந்திரன். இவர் தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் டிக்டாக் மற்றும் முகநூலில் அதிக நேரம் செலவு செய்துள்ளார். இந்த நிலையில் டிக்டாக்கில் அவருக்கு திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்ததாகவும், டிக் டாக் மூலமும் பேஸ்புக் மூலமும் நீண்ட நேரம் இருவரும் உரையாடி, ஒருவரை ஒருவர் நெருக்கமானதாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென ஒருநாள் இளம்பெண் சுசி, தனது வீட்டில் குடும்ப பிரச்சினை இருப்பதாகவும் தனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் அதற்கு தங்களிடம் சுத்தமாக பணம் இல்லை என்றும் முடிந்தால் உதவுங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தைகளை நம்பிய கல்லூரி மாணவர் ராமச்சந்திரன் அவரது வங்கிக் கணக்கிற்கு 97 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து சில நாட்களில் இளம்பெண் சுசி கல்லூரி மாணவரிடம் பேசாமல் டிக்டாக் செயலியிலும் தலைகாட்டாமல் போனை ஆப் செய்து வைத்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த கல்லூரி மாணவர் ராமச்சந்திரன் இதுகுறித்து மதுரை காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருப்பூரில் தலைமறைவாக இருந்த சுசியை கண்டுபிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமச்சந்திரன் போலவே மேலும் பல கல்லூரி மாணவர்களை ஏமாற்றி பணம் பறித்த தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் உள்பட பல பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். டிக் டாக் மூலம் கல்லூரி மாணவர்களை ஏமாற்றி மோசடி செய்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout