'வலிமை' அப்டேட் தந்த மாவட்ட கலெக்டர்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,March 10 2021]

அஜித் நடித்து வரும் 'வலிமை’ படத்தின் அப்டேட்டை அவரது ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த அறிவிப்புகளை தேர்தல் கமிஷனும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ’வலி’மை குறித்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டில் உள்ளது என்று குறிப்பிட்டு அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். இதுதான் ’வலி’மை அப்டேட் மக்களே என்று அவர் குறிப்பிட்டிருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

பாதகமான கருத்துக் கணிப்பு பற்றி ஒரு கவலையும் இல்ல… முதல்வர் பதிலடி!

வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்கேட்டிங் செய்யும்போது விழுந்து வாரிய விஜய் பட நாயகி… அதிர்ச்சி வீடியோ!

தமிழில் இயக்குநர் ஷங்கர் படமான “பாய்ஸ்“ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா

விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 

அகில இந்திய சாதனை பட்டியலில் இடம்பெற்ற 'குக் வித் கோமாளி' பவித்ரா!

அகில இந்திய அளவில் வரையப்பட்ட மிகப் பெரிய சுவர் ஓவியங்களில் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்ட பவித்ராவின் ஓவியமும் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது 

ஷங்கர்-ராம்சரண் தேஜா படத்திற்கு அனிருத்துக்கு பதில் இவரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண்தேஜா நடிக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே