திருப்பதி கோயில் முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு: கோயில் மூடப்படுமா?
- IndiaGlitz, [Monday,July 20 2020]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக திருப்பதி கோயில் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கோயில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளிவந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 75. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கோயிலின் தலைமை அர்ச்சகர் நரசிம்மாச்சாரியார் உள்பட 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து திருப்பதியில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், ஆந்திர முதலமைச்சர் மற்றும் அறங்காவலர் குழு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது