தவறான செய்தியை பகிர வேண்டாம்: விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,May 22 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய ’இடம் பொருள் ஏவல்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரானது. இருப்பினும் இந்த படத்தின் ஒருசில ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக சிலர் சமூக ஊடகங்களில் தகவல்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ’இடம் பொருள் ஏவல்’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனர் லிங்குசாமியின் சகோதரருமான சுபாஷ் சந்திர போஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எங்கள்‌ திருப்பதி பிரதர்ஸ்‌ நிறுவனம்‌ தயாரித்து இயக்குனர்‌ சீனுராமசாமி அவர்கள்‌ இயக்கிய இடம்‌ பொருள்‌ ஏவல்‌ திரைப்படம்‌ ஜூலை மாதம்‌ வெளியாகிறது என்று சிலர்‌ டிவிட்டரில்‌ செய்தி பரப்பி வருவதாக தெரிகிறது. திருப்பதி பிரதர்ஸ்‌ நிறுவனம்‌ ’இடம்‌ பொருள்‌ ஏவல்’‌ ரீலீஸ்‌ தேதி குறித்து எந்த முடிவும்‌ எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம்‌. கொரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள்‌
விநியோகஸ்தற்களிடம்‌ கலந்து பேசி , எங்கள்‌ திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரிலீஸ்‌ தேதியை அறிவிப்போம்‌. அதுவரை தவறான செய்திகளை பகிர வேண்டாம்‌ என்று எங்கள்‌ நிறுவனம்‌ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்‌

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

More News

கொரோனா நேரத்தில் எந்த பொருளை வாங்கலாம்??? எதை வாங்கக் கூடாது??? நுகர்வோருக்கு சில ஆலோசனைகள்!!!

கொரோனா ஊரடங்கில் தேங்கியிருந்த அனைத்து உற்பத்திப் பொருள்களையும் விற்றுத் தீர்த்து விடவேண்டும் என்ற அவசரத்தில் தற்போது வணிகர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தெருவில் பழம் விற்கும் நடிகர்: ஊரடங்கால் ஏற்பட்ட பரிதாபம்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் ஓடலாம்: ஆனால் ஒரு நிபந்தனை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் ஸ்தம்பித்து போயுள்ளனர்

கொரோனாவால் வேலையிழந்தவர் திடீரென கோடீஸ்வரரான அதிசயம்!

https://tamil.news18.com/news/international/new-zealand-man-who-lost-job-during-lockdown-wins-rs-47-crore-in-lottery-msb-293097.html

யாருக்கும் சம்பளம் இல்லை: புதிய முயற்சியில் விஜய்சேதுபதி-கே.எஸ்.ரவிகுமார்

ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், டெக்னீஷியன் உள்பட அனைவரும் லாபம் அடைவார்கள். ஆனால் அதே திரைப்படம் தோல்வி அடைந்தால்