தவறான செய்தியை பகிர வேண்டாம்: விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய ’இடம் பொருள் ஏவல்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரானது. இருப்பினும் இந்த படத்தின் ஒருசில ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக சிலர் சமூக ஊடகங்களில் தகவல்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ’இடம் பொருள் ஏவல்’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனர் லிங்குசாமியின் சகோதரருமான சுபாஷ் சந்திர போஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் இயக்கிய "இடம் பொருள் ஏவல்" திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் டிவிட்டரில் செய்தி பரப்பி வருவதாக தெரிகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ’இடம் பொருள் ஏவல்’ ரீலீஸ் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம். கொரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள்
விநியோகஸ்தற்களிடம் கலந்து பேசி , எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளை பகிர வேண்டாம் என்று எங்கள் நிறுவனம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
— Subash Chandra Bose (@itisbose) May 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com