கடனில் இருக்கிறோம், காப்பாற்றுங்கள்: கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் மீது இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’உத்தம வில்லன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து இந்த படம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட இன்னொரு படம் நடித்து தருவதாக கமல்ஹாசன் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக படம் நடித்து தரவில்லை என்று திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் கமல்ஹாசன் மீது புகார் அளித்துள்ளது. இந்த புகாரில் ’உத்தம வில்லன்' பட தோல்விக்கு நஷ்ட ஈடு செய்ய எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமல்ஹாசன் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் 9 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் அவர் படம் நடித்து தரவில்லை.
எனவே தயாரிப்பாளர் சங்கம் இதில் தலையிட்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல்ஹாசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கமல்ஹாசன் ஒப்புக்கொண்டபடி தயாரிப்பாளர் சங்கம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க அவரை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தங்களுக்கு கடன் கொடுத்த அனைவரும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் அந்த புகார் மனுவில் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல்ஹாசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout