சினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி....! தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிர பரிசோதனை நடத்தி வருகிறார்கள்...
திருச்சி மாவட்டத்தில், சென்ற ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா வைத்திருந்த 10-க்கும் அதிகமானோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தனிப்படை காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசாருக்கு வந்த தகவலின்படி, மன்னார்புரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக தெரிய வந்தது. அப்போது தீவிர வாகன பரிசோதனையில் போலீசார் ஈடுபட, விமான நிலையம் உள்ள பகுதியிலிருந்து வந்த கார் ஒன்று சோதனைக்கு நிற்காமல் பறந்து சென்றது.
இதை பின்தொடர்ந்த தனிப்படை போலீசாரும், விடாமல் பைக்கிலும், காரிலும் துரத்தினர். ஆனால் கார் சென்னை 4 வழிச்சாலையில் வேகமாக சென்றது. இவர்களை பின்தொடர்ந்து பைக்கில் விரட்டிச்சென்றார் தலைமைக் காவலர் சரவணன். பைக்கில் இருந்தவாறே காரை நிறுத்த சொன்ன சமயத்திலும், கார் நிற்காமல் சென்றது. இதனால் காரின் முன்பக்கம் படுத்தவாரும், காரை தொற்றியபடியும், காரின் ஸ்டியரிங்கை திருப்பிவாறு செய்தார் சரவணன். இதனால் கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரிலிருந்து தலைமைக் காவலர் தூக்கி வீசப்பட்டதையடுத்து, பின்னால் வந்த போலீசார், காரை ஓட்டி வந்த முகமது ஹனீபா என்ற நபரை சாதுர்யமாக பிடித்தனர். அவனிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சரவணன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமைக்காவலர் நலமுடன் உள்ள நிலையில், அவரின் திறமையான செயலுக்கு உயர் அதிகாரிகள் உட்பட பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments