சினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி....! தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிர பரிசோதனை நடத்தி வருகிறார்கள்...

திருச்சி மாவட்டத்தில், சென்ற ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா வைத்திருந்த 10-க்கும் அதிகமானோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தனிப்படை காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசாருக்கு வந்த தகவலின்படி, மன்னார்புரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக தெரிய வந்தது. அப்போது தீவிர வாகன பரிசோதனையில் போலீசார் ஈடுபட, விமான நிலையம் உள்ள பகுதியிலிருந்து வந்த கார் ஒன்று சோதனைக்கு நிற்காமல் பறந்து சென்றது.

இதை பின்தொடர்ந்த தனிப்படை போலீசாரும், விடாமல் பைக்கிலும், காரிலும் துரத்தினர். ஆனால் கார் சென்னை 4 வழிச்சாலையில் வேகமாக சென்றது. இவர்களை பின்தொடர்ந்து பைக்கில் விரட்டிச்சென்றார் தலைமைக் காவலர் சரவணன். பைக்கில் இருந்தவாறே காரை நிறுத்த சொன்ன சமயத்திலும், கார் நிற்காமல் சென்றது. இதனால் காரின் முன்பக்கம் படுத்தவாரும், காரை தொற்றியபடியும், காரின் ஸ்டியரிங்கை திருப்பிவாறு செய்தார் சரவணன். இதனால் கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரிலிருந்து தலைமைக் காவலர் தூக்கி வீசப்பட்டதையடுத்து, பின்னால் வந்த போலீசார், காரை ஓட்டி வந்த முகமது ஹனீபா என்ற நபரை சாதுர்யமாக பிடித்தனர். அவனிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சரவணன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமைக்காவலர் நலமுடன் உள்ள நிலையில், அவரின் திறமையான செயலுக்கு உயர் அதிகாரிகள் உட்பட பலரும் பாராட்டி வருகிறார்கள்.

More News

பாரதி கண்ணம்மா தொடர்....! நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...?

தனியார் சேனலில் வெளியாகி, தற்போது வரவேற்பு பெற்றுள்ள சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான்.

தோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா? 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை யாஷிகா தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது அவர் வந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது

விஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு!

கார் வரி வழக்கில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் ஆகியவற்றுக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட

பிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா? இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்!

இந்தியாவில் பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு,

ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்!

நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி செய்த போது அந்த காருக்கான நுழைவு வரி கட்ட வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்த்து விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்