துணி மாஸ்க்கை யூஸ் பண்றீங்களா… கவனிக்க வேண்டிய சில முக்கியமான டிபஸ்!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]


கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்பிக்க தற்போது கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. ஆனாலும் மாஸ்க் பயன்படுத்தவதை நிறுத்த முடியாத அளவிற்கு இக்கட்டான சூழல் நீடித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் N95 மாஸ்க்கு பயன்படுத்திவரும் சிலர் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கிறது என்றுகூறி சமீபகாலமாக துணி மாஸ்க்கை பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதோடு இந்தவகை துணி மாஸ்க்குகள் Budget friendlyஆக இருப்பதும் சிலருக்கு பிடித்துப் போய்விடுகிறது. இதனால் துணிவகை மாஸ்க்குகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த துணிவகை மாஸ்க்குகளைப் பயன்படுத்தும்போது சில அவசியமான விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

குறிப்பாக துணிவகை மாஸ்க்குகள் காலாவதியாகி விட்டதா என்பதை கண்டுபிடிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். சில துணிகள் சல்லடைப் போன்று மெல்லிசான நிலைமைக்கு வரும்வரை நாம் காத்திருக்காமல் உடனே அதை மாற்றிவிடுவது நல்லது.

அதேபோல துணிவகை மாஸ்க்குகளை அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். ஒருநாள் முழுக்க ஒரே மாஸ்க்கை பயன்படுத்தினால் அதில் ஈரம் படிந்து, அதுவே எமனாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதை பார்த்து வருகிறோம். அதனால் மாஸ்க் பயன்படுத்துவதை அவசியமாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல ஈரமான மாஸ்க் பயன்படுத்தும்போது கருப்பு பூஞ்சை தொற்று வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. எனவே ஈரமான அழுக்கு படிந்த மாஸ்க்குகளை தவிர்த்து விடுவது நல்லது.

துணி மாஸ்க்கை துவைக்கும்போது சுடு தண்ணீரில் நனைத்து துவைக்க வேண்டும். இதனால் துணியின் ஆயுட்காலம் நீடிப்பதோடு துணியில் படிந்திருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகளையும் ஒழிக்க முடியும்.

துணி வகை மாஸ்க்குகள் மெல்லியதாக இருக்கக்கூடாது. அதேபோல பேஷனுக்காக ஜிகினா கற்களைப் பதித்துக் கொண்டிருப்பதைவிட அடர்த்தியான துணி வகைகளால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கூடவே 3 அடுக்கு பாதுகாப்பு கொண்டதாக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு.

மாஸ்க்கை பயன்படுத்தும்போது துணி இறுக்கமாக இருக்கிறதா? அல்லது சல்லடை நிலைக்கு வந்துவிட்டதா? என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் எலாஸ்டிக் அல்லது பின்பக்க கயிறு அருந்துபோகும் வரை தொடர்ந்து மாஸ்க் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

துணி மாஸ்க்குகள் சில நேரங்களில் வாய், மூக்கு முழுவதையும் மூட முடியாதபடி சிறியதாக கடைகளில் கிடைக்கிறது. இதுபோன்ற சிறிய மாஸ்க்குகளை தவிர்த்து விடுவது நல்லது.

துணி மாஸ்க்குகளை அடிக்கடி மாற்ற மாற்றி பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் எப்போதும் இன்னும் ஒன்றிரண்டு மாஸ்க்குகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த மாஸ்க்குகளை இறுக்கமான கவருக்குள் அழுக்கு படியாதவாறு வைத்து பயன்படுத்த வேண்டும்.

துணியின் தரம் அதாவது நூலிலைகள் நெகிழ்ந்து போய்விட்டால் உடனே அதைத் தூக்கியெறிந்து விடுவது நல்லது. இதுபோன்ற டிப்ஸ்களைப் கவனத்தில் கொண்டு கொரோனா நேரத்தில் கூடுதலான பாதுகாப்புடன் இருங்கள்.

More News

இது ஆந்தாலஜி படம் இல்லை....! படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....!

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தான், கசடதபற’. இப்படத்தை பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ளார்

சமந்தாவுக்கு கிடைத்த சூப்பர் விருது: திரையுலகினர் வாழ்த்து!

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விழாவில் பல தமிழ் திரைப்படங்கள் கலந்து கொண்டன என்பது தெரிந்ததே. குறிப்பாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யா சிறந்த

பூஜா ஹெக்டே பகிர்ந்த 'பீஸ்ட்' படப்பிடிப்பு புகைப்படம்: இணையத்தில் வைரல்

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்புக்காக தயாராகும் புகைப்படம் ஒன்றை இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே

கணவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற சூப்பர் ஸ்டார் மகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுப்பிரமணியன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

விஜய் ஜோடியாக மகேஷ்பாபு மனைவி: திடீரென ஏற்பட்ட திருப்பம்!

தளபதி விஜய் நடித்த படம் ஒன்றில் மகேஷ் பாபுவின் மனைவி நடிக்க ஒப்பந்தம் ஆகி அதன் பின்னர் திடீரென விலகி உள்ளதாக நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தகவல் வெளிவந்துள்ளது.