39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்!

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

செஞ்சி பகுதியைச் சேர்ந்த கடல் கன்னி என்ற 39 வயது பெண் கணவரை இழந்தவர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். விவசாயத்துக்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனது மூன்று குழந்தைகளுக்காக வேலை செய்து வாழ்ந்து வருகிறார்

இந்நிலையில் ஓய்வு நேரத்தில் இவர் டிக்டாக் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒருசில பெண்கள் போல் இல்லாமல் இவர் டிக்டாக்கில் நல்ல கருத்துக்களை கூறும் வழக்கத்தை உடையவராக இருந்துள்ளார். இதனால் இவருக்கு பாலோயர்கள் குவிந்தது குறுகிய காலத்தில் இவருக்கு 33 ஆயிரம் பாலோயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடல்கன்னிக்கு மூன்று பெண்கள் டிக்டாக் மூலம் அறிமுகமானார்கள். அவர்கள் மூவரும் கடல்கன்னியிடம் மிகவும் நெருக்கமாகி ஒரு கட்டத்தில் தாங்கள் சொல்வதை கேட்டால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்கள். கடல்கன்னியும் ஆசையுடன் அதுகுறித்து விவரமாக கேட்டபோதுதான் அது விபச்சாரம் என்று தெரியவந்தது

இதனை அடுத்து தனக்கு அதில் விருப்பமில்லை என்றும் அவ்வாறு வரும் பணம் தனக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூன்று பெண்கள் கடற்கன்னியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர்

இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்த கடல்கன்னியின் பாலோயர்கள் அதிர்ச்சி அடைந்து நீங்களா இப்படி? என கேள்வி எழுப்பினார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கடல்கன்னி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அவருடைய புகாரை கண்டுகொள்ளாததால் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. தற்போது தான் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்