டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கப்பட்டது....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களான டிக்டாக், வீசாட் போன்ற செயலிகளுக்கான, தடையை அரசு நீக்கியுள்ளது.
அமெரிக்க அதிபரான ஜோ-பைடன், அந்நாட்டில் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு, விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபரான நாளிலிருந்து, ஜனநாயகக் கட்சியின் ஜோ-பைடன் பல மாற்றங்களை கொண்டு வருகிறார். அந்தவகையில் ட்ரம்ப் விதித்திருந்த பல நிர்வாக உத்தரவுகளை நீக்கியுள்ளார் பைடன். பணியை துவங்கிய முதல் நாளிலிருந்தே, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா இணையும் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் கையெழுத்திட்டார். மெக்சிகோவில் அகதிகள் நுழையாமல் தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. அந்த எல்லைச்சுவர் கட்டும் பணிகளையும் பைடன் நிறுத்தினார்.
இதேபோல் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கும் பொருட்டு, புதிய பயனாளர்கள் அச்செயலிகளை பதிவிறக்கம் செய்யமுடியாதபடி தடை உத்தரவிட்டிருந்தார் ட்ரம்ப். ஆனால் இது நடைமுறைக்கு வராத பட்சத்தில், நீதிமன்றங்கள் இந்த உத்தரவுகளை தடுக்க செய்தது. அந்தவகையில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளின் தடைக்கான உத்தரவை நீக்கி கையெழுத்திட்டுள்ளார் ஜோ-பைடன். அதேபோல் இதில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஏற்கனவே இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments