டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கப்பட்டது....!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

சமூக வலைத்தளங்களான டிக்டாக், வீசாட் போன்ற செயலிகளுக்கான, தடையை அரசு நீக்கியுள்ளது.

அமெரிக்க அதிபரான ஜோ-பைடன், அந்நாட்டில் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு, விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபரான நாளிலிருந்து, ஜனநாயகக் கட்சியின் ஜோ-பைடன் பல மாற்றங்களை கொண்டு வருகிறார். அந்தவகையில் ட்ரம்ப் விதித்திருந்த பல நிர்வாக உத்தரவுகளை நீக்கியுள்ளார் பைடன். பணியை துவங்கிய முதல் நாளிலிருந்தே, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா இணையும் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் கையெழுத்திட்டார். மெக்சிகோவில் அகதிகள் நுழையாமல் தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. அந்த எல்லைச்சுவர் கட்டும் பணிகளையும் பைடன் நிறுத்தினார்.

இதேபோல் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கும் பொருட்டு, புதிய பயனாளர்கள் அச்செயலிகளை பதிவிறக்கம் செய்யமுடியாதபடி தடை உத்தரவிட்டிருந்தார் ட்ரம்ப். ஆனால் இது நடைமுறைக்கு வராத பட்சத்தில், நீதிமன்றங்கள் இந்த உத்தரவுகளை தடுக்க செய்தது. அந்தவகையில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளின் தடைக்கான உத்தரவை நீக்கி கையெழுத்திட்டுள்ளார் ஜோ-பைடன். அதேபோல் இதில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஏற்கனவே இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

 

More News

வாத்தி கம்மிங்....! கோவை கொரோனா வார்டில் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்...!

கோவையில் கொரோனா வார்டில், நோயாளிகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்? சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' சூர்யா நடிப்பில் பாண்டிராஜ்

சிங்கிள் அண்ட் அவைலபிள்: 4வது திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் விளக்கம்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம் நடந்ததாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் தான் தற்போது

'காப்பான்' பட நடிகரின் தாயார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவரின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தடுப்பூசி செலுத்தி கொண்ட தமிழ் இயக்குநர்… முதல்வருக்கு அறிக்கை வெளியிட்டு பாராட்டு!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.