என்னால ஏசி இல்லாம இருக்க முடியாது: கொரோன டெஸ்ட் எடுக்க டிக்டாக் பிரபலத்தால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் சிங்கப்பூரில் ஏசியில் இருந்து பழகி விட்டதால் என்னால் சாதாரண அறையில் டெஸ்ட் எடுக்க வர முடியாது என்றும், சிறப்பு அறை வேண்டும், தனிமைப்படுத்தப்பட்டால், தனி அறை வேண்டும் எனவும் பிடிவாதம் பிடித்த டிக் டாக் பிரபலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிக் டாக் மூலம் புகழ்பெற்றவர் சூர்யா என்ற பெண்ணை ரவுடிபேபி சூர்யா என்றே டிக்டாக்கில் உள்ளவர்கள் அழைப்பதுண்டு. டிக்டாக்கில் ஆபாச வசனங்கள், ஆபாச உடை அணிந்து ஆடும் நடனங்களால் இவர் புகழ் பெற்றார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் லாக்டவுன் காரணமாக சிங்கப்பூரிலேயே மாட்டி கொண்டார். தற்போது சிறப்பு விமானங்கள் இயங்க தொடங்கியதை அடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவைக்க்கு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தபோது, தான் சிங்கப்பூரில் ஏசி அறையிலேயே இருந்ததாகவும் தன்னால் தமிழ்நாட்டு வெயிலில் சாதாரண அறையில் டெஸ்ட் எடுக்க வர முடியாது என்றும் தனக்கு சிறப்பு அறை வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார். மேலும் கொரோனா டெஸ்ட் எடுத்த பின்னர் ரிசல்ட் வரும் வரை தனிமைப்படுத்தப்படும் காலத்தில் தனக்கு தனி அறை வேண்டும் என்றும், தான் டிக்டாக் பிரபலம் என்பதால் பொது அறையில் இருந்தால் தன்னால் பாத்ரூம் கூட செல்ல முடியாது என்றும் தனியறை கேட்டு அடம் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ரவுடிபேபி சூர்யாவை சமாதானம் செய்த சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா டெஸ்ட்டை ஒருவழியாக எடுத்து முடித்தனர். இந்த டெஸ்டின் முடிவு இன்று அல்லது நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout