ரவுசு செய்யும் ரவுடி பேபி சூர்யா....! ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக, ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் என்ற பகுதியில் சபரிநகரில் வசித்து வருபவர் தான் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி. டிக்டாக்-கில் ஆபாச வீடியோக்கள் மற்றும் கெட்டவார்த்தை பேசி வீடியோ வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தற்போது யுடியூபில் தவறான வார்த்தைகள் பேசியும், அரைகுறை ஆடைகள் அணிந்தும், மற்றவர்களை அசிங்கமா பேசியும் வீடியோ பதிவிட்டு வருகிறார். யுடியுபில் பெரும்பாலும் நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் தன்னை 4 பேர் கொண்ட கும்பல், கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இணையத்தில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் நல்லூர் காவல் நிலையத்தில், இன்று புகாரளித்துள்ளார். தன்னை மிரட்டியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இணையவாசிகள் ரவுண்டு கட்டி கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments