கொரோனா நிவாரண நிதியாக மிகப்பெரிய தொகை கொடுத்த டிக்டாக்!
- IndiaGlitz, [Saturday,April 11 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்கி வருகின்றன என்பது தெரிந்ததே. இந்தியாவில் டாடா நிறுவனம் ரூபாய் 1500 கோடி கொரோனா தடுப்பு நிதியாக மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்டர்நெட் உபயோகிக்கும் மக்களிடம் மிக வேகமாக வளர்ந்த செயலிகளில் ஒன்று டிக்டாக். தமிழகம் உள்பட இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் மிக வேகமாக மக்களின் மனதை குறிப்பாக இளம்பெண்களை கவர்ந்த செயலி டிக்டாக் என்பதும், இளம்பெண்களின் டிக்டாக் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிக்டாக் நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 375 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 2800 கோடி ரூபாய்க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஒரு பில்லியன் டாலர் கொரோனா தடுப்பு நிதியாக கொடுத்துள்ள நிலையில் தற்போது டிக்டாக் நிறுவனம் 375 மில்லியன் டாலர் கொரோனா தடுப்பு நிதியாக கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.