டிக்டாக் ஓனர் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

  • IndiaGlitz, [Saturday,November 02 2019]

டிக்டாக் செயலி குறித்து அறியாத நபர்கள் இருக்க முடியாது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் டிக்டாக் ஓனர் பைட் டான்ஸ் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் தயாரித்துள்ள முதல் ஸ்மார்ட்போன் தற்போது சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பைட் டான்ஸ் நிறுவனம் தற்போது தனது முதல் மாடலான Smartisan Jianguo Pro 3 என்ற மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நான்கு கேமிராக்கள், 855+SoC திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் லாக்கில் இருந்தாலும் நேரடியாக டிக்டாக் செயலிக்கு மட்டும் செல்லும் வசதி உண்டு

கண்களை கவரும் மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் வெளியாகி உள்ளது. விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் 29 ஆயிரம் ரூபாய்க்கும்,
8ஜிபி + 256 ஜிபி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் 32 ஆயிரம் ரூபாய்க்கும், விற்பனையாகிறது. இந்த இரு போன்களும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.

அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் பச்சை நிறத்தில் கிடைக்கும். இதன் விலை 36 ஆயிரம் ரூபாய் ஆகும். 6.39 இன்ச் முழு ஹெச்டி+ டிஸ்ப்ளே, 48 மெகா பிக்சல் ரியர் கேமிரா மற்றும் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் 4,000mAh என்பது குறிப்பிடத்தக்கது