இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் டிக்டாக்.....! 2.0 ஸ்டைலில் வெளிவருகிறதா....?
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக்டாக் செயலி இந்தியாவில் மீண்டும் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றில் டிக்டாக் செயலியை கோடிக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர். இச்செயலியை தடை செய்யவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்கிடையே சென்ற 2020-ஆம் ஆண்டு, லடாக், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் போராடியதால், ஏராளமான சீன ராணுவத்தினர் உயிர் இழந்தார்கள். இது மாபெரும் பிரச்சனையாக வெடிக்க, சீன செயலிகளான டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் பயனாளர்கள் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டும் அடங்கும்.
தற்போது இந்தியாவில் இதன் பெயரை மாற்றி பேட்டில்கிரவுண்ட் என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர். இதைப்போலவே தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியும், பெயர் மாற்றத்தோடு இந்தியாவிற்கு வர உள்ளது.
இச்செயலியின் டெவலப் நிறுவனமான பைட் டான்ஸ் (byte Dance), மத்திய தொழிற்துறை அமைச்சகத்திடம் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமையையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிக்டாக் (tic-Tok) என்பது, டிக் டோக் (Tik-Tock) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சின்னம் மற்றும் பெயர் மாற்றத்தோடு டிக்டாக் செயலி, இந்தியாவில் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments