அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமாகும் டிக்டாக் பிரபலம்!

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் பலர் சினிமாவில் நுழைந்து கொண்டிருக்கும் நிலையில் டிக்டாக் செயலியில் பிரபலமான இலக்கியா, தற்போது திரைப்படமொன்றில் நாயகியாக நடித்து வருகிறார்.

‘நீ சுடாம வந்தியா’ என்ற திரைப்படத்தில் தான் டிக்டாக் இலக்கியா நாயகியாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தில் விக்கி என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

விக்கி, இலக்கியாவுடன் இந்த படத்தில் பிரதீபா, தீனா, ரஞ்சனி, அர்ச்சனா, ரோஸி திருநங்கை லாவண்யா உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு துரைராஜன் என்பவர் இசையமைக்க உள்ளதாகவும் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் கானா பாடல்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு ஹாரர் அடல்ட் காமெடி படம் என்றும் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே இளசுகளுக்கு இந்த படம் நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்பட வாய்ப்புக்காக படுக்கையை கூட பகிர்ந்ததாக அதிரடியாக பேட்டி அளித்து இருந்த இலக்கியாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

திடீரென இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளை டெலிட் செய்த த்ரிஷா: ரசிகர்கள் குழப்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தனது சமூக வலைகளில் ஆக்டிவாக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

3 வயது குழந்தையின் உயிரைப்பறித்த டிவி!!! பரபரப்பு சம்பவம்!!!

சென்னையின் தாம்பரம் அடுத்த சேலையூரில் டிவி மேல் இருந்த செல்போனை எடுக்க முயன்றதால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது

கொரோனா மரபணுவில் மாற்றம்-10 மடங்கு தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் பரவுவதாகப் பரபரப்பு!!!

கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஒன்றே இறுதித் தீர்வாக நம்பப்படுகிறது.

தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது: வேதாந்தா கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஆலைக்கு தடை விதித்தது