டிக் டாக் தடையால் மனநிலை பாதிப்படைந்த பிரபலம்: பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கின் ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவின் 59 செயலிகள் சமீபத்தில் தடை செய்யப்பட்டது. அதில் முக்கியமாக ஹலோ மற்றும் டிக் டாக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிக்டாக் திடீரென தடை செய்யப்பட்டால் அதில் பிரபலமாக இருந்த பலர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக இருப்பவர் ஜிபி முத்து/ இவர் தனது வீடியோவை பிறரிடம் திட்டு வாங்குவதற்காகவே வெளியிட்டு வருவார். இவரது வீடியோவை பார்த்து இவரை டிக் டாக் பயனாளிகள் திட்டுவதும், பயனாளிகளை இவர் திட்டுவதும்தான் இவரது வீடியோவில் உள்ள ஸ்பெஷல்.
இந்த நிலையில் டிக் டாக் தடை காரணமாக ஜிபி முத்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிக்டாக் தடை காரணமாக தனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார். டிக்டாக் போன்று மற்ற செயலிகளை தான் பயன்படுத்தியதாகவும் ஆனால் டிக் டாக் போன்று இல்லை என்றும், எனவே தனக்கு கண்டிப்பாக டிக்டாக் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய பிரதமர் மோடி அவர்களே தயவு செய்து விட்டு டிக்டாக் தடையை எடுத்துவிட்டு, டிக்டாக்கை ஓபன் பண்ணி விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். டிக்டாக்கால் மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி இருக்கும் இவரது இந்த வீடியோவுக்கும் வழக்கம்போல் பயனாளிகள் திட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments