டிக்டாக் காதலி, இன்ஸ்டாகிராம் காதலன், பேஸ்புக் நண்பர்: 18 வயது காதலர்களால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக் டாக்கில் பிரபலமான 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் பழக்கமான ஒரு இளைஞருடன் காதல் கொண்டதாகவும், இந்த காதலுக்கு பேஸ்புக்கில் உள்ள அவருடைய நண்பர் உதவி செய்ததாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கேரளாவிலுள்ள கொச்சி பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, அடிக்கடி டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்ததால் அவர் டிக்டாக்கில் பிரபலமாக இருந்தார். அவருக்கு சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு 18 வயது கல்லூரி மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதையடுத்து இருவரும் சந்தித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து கொச்சியில் இருந்து பெங்களூர் செல்ல கல்லூரி மாணவி முடிவு செய்தார்.
இந்த நிலையில் லாக்டவுன் காரணமாக பேருந்து ரயில்கள் ஓடாததால் கொச்சியில் இருந்து விமானம் மூலம் தனது இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்க பெங்களூருக்கு செல்ல கல்லூரி மாணவி முடிவு செய்தார். இதனை அடுத்து விமானத்தில் செல்ல அவர் தனது பேஸ்புக் நண்பரிடம் உதவி கேட்டபோது, அவர் விமான டிக்கெட் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தன்னுடைய ஆட்டோவில் விமான நிலையம் வரை கொண்டு சென்று விட்டுள்ளார்
இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என கல்லூரி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் உடனடியாக செயல்பட்டு போலீஸ் வாட்ஸ்அப் குழுவில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் கொச்சி விமானநிலையத்தில் ஆட்டோவிலிருந்து கல்லூரி மாணவி இறங்குவதை போலீசார் கண்டுபிடித்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்
அப்போது அவர் பெங்களூரில் உள்ள தனது இன்ஸ்டாகிராம் காதலனை பார்ப்பதற்கு செல்வதாகவும் அவரையே திருமணம் செய்யவுள்ளதாகவும், பெற்றோர்களிடம் திரும்பி செல்ல மாட்டேன் என்றும் கூறினார். இதனையடுத்து போலீசார் பெங்களூர் காதலனுக்கு போன் செய்து அதை ஸ்பீக்கரில் போட்டு அந்த கல்லூரி மாணவியை கேட்க வைத்தனர். அதில் ’அந்தப் பெண் யார் என்றே தனக்கு தெரியாது’ என்று அந்த இளைஞர் கூறியதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்ட அந்த கல்லூரி மாணவி, பெற்றோர்களுடன் சென்றார்
18 வயதில் ஏற்பட்ட அறியா காதலுக்கு ஃபேஸ்புக் நண்பர் ஒருவரும் அறியாமல் உதவி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் போலீசாரின் அதிரடி மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் அந்த இளம்பெண் காப்பாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com