யோகி பாபுவிடம் மன்னிப்பு கேட்ட துணை நடிகை: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Friday,February 21 2020]

நடிகர் யோகிபாபுவுக்கு மஞ்சுபார்கவி என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவரை ஒருதலையாக காதலிப்பதாக அவரது திருமணம் குறித்து அழுதுகொண்டே துணை நடிகை சுஜி என்பவர் டிக்டாக்வீடியோ வெளியிட்டுள்ளார்.

யோகிபாபுவுக்கு திருமணம் நடந்த நாள் சுஜி வீடியோக்களை பதிவு செய்து வருவதாகவும், தான் யோகிபாபுவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், யோகி பாபுவுக்கு திருமணமானது தனக்கு அதிர்ச்சி அடைந்ததாகவும் சுஜி தனது வீடியோக்களில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த பிரச்சனையை பெரிதாக்கி விரும்பாத நடிகர் யோகிபாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த துணை நடிகை யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை என்றும் கூறினார். இருப்பினும் தனக்காக அவர் வீடியோக்களை வெளியிட்டு வருவதால் தனது குடும்பத்தில் மட்டுமின்றி அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படும் என்றும் எனவே இதுபோன்ற வீடியோக்களை அவர் இனிமேல் தொடராமல் இருப்பது இரண்டு குடும்பத்திற்கும் நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

யோகிபாபுவின் இந்த பெருந்தன்மையான பேட்டியை கேட்ட அந்த துணை நடிகை சுஜி, தற்போது யோகிபாபுவிடம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். யோகிபாபு திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி லைக்ஸ்களை அள்ளுவது மட்டுமே அந்த துணை நடிகையின் எண்ணம் என்று கூறப்படுகிறது.
 

More News

கமல்ஹாசனை அடுத்து லைகா அளித்த நிதியுதவி குறித்த அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

'மதயானை கூட்டம்' பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு!

கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி, கலையரசன் உள்பட பலரது நடிப்பில் ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'மதயானை கூட்டம்'. கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை

யுவராஜ் சிங் நடிக்கப்போகும் வெப் சீரிஸ்..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது சகோதரர் ஜோராவர் சிங் ஆகியோர் இடம்பெறும் வெப் சீரிஸை உருவாக்குவது பெருமைமிக்க விஷயம்.

ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது எவ்வளவு நேரமாகும் என்பதை ட்ராக் செய்ய புது App..!

108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய பிரத்யேக செயலி இரண்டு மாதத்தில் துவங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆபாச நடிகையான மகள்: வாழ்த்து தெரிவித்த உலகப்புகழ் பெற்ற பிரபல இயக்குனர்!

உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஒருவர் தனது மகள் ஆபாச நடிகையாக விருப்பம் தெரிவித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது