யோகி பாபுவிடம் மன்னிப்பு கேட்ட துணை நடிகை: பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் யோகிபாபுவுக்கு மஞ்சுபார்கவி என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவரை ஒருதலையாக காதலிப்பதாக அவரது திருமணம் குறித்து அழுதுகொண்டே துணை நடிகை சுஜி என்பவர் டிக்டாக்வீடியோ வெளியிட்டுள்ளார்.
யோகிபாபுவுக்கு திருமணம் நடந்த நாள் சுஜி வீடியோக்களை பதிவு செய்து வருவதாகவும், தான் யோகிபாபுவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், யோகி பாபுவுக்கு திருமணமானது தனக்கு அதிர்ச்சி அடைந்ததாகவும் சுஜி தனது வீடியோக்களில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த பிரச்சனையை பெரிதாக்கி விரும்பாத நடிகர் யோகிபாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த துணை நடிகை யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை என்றும் கூறினார். இருப்பினும் தனக்காக அவர் வீடியோக்களை வெளியிட்டு வருவதால் தனது குடும்பத்தில் மட்டுமின்றி அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படும் என்றும் எனவே இதுபோன்ற வீடியோக்களை அவர் இனிமேல் தொடராமல் இருப்பது இரண்டு குடும்பத்திற்கும் நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
யோகிபாபுவின் இந்த பெருந்தன்மையான பேட்டியை கேட்ட அந்த துணை நடிகை சுஜி, தற்போது யோகிபாபுவிடம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். யோகிபாபு திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி லைக்ஸ்களை அள்ளுவது மட்டுமே அந்த துணை நடிகையின் எண்ணம் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments