ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம்: பெண் டிக்டாக் பிரபலம் கைது!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வைரலாக்கிய பெண் டிக் டாக் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் மேக்கப் கலைஞராக பணியாற்றும் தேனியை சேர்ந்த டிக்டாக் வீடியோ பிரபலம் சுகந்தி என்பவர் ஒத்தக்கடை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது டிக்டாக் பிரபலம் சுகந்தி இணையதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சினிமாவில் மேக்கப் கலைஞராக பணியாற்றும் சுகந்தி டிக் டாக் இணையதளத்தில் பிரபலமானவர் என்பதும், இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் அவர் மற்ற சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.