காதலனுக்கு மகளை இணங்க சொன்ன டிக்டாக் அமுதா...! கள்ளக்காதல் ஜோடியை, கம்பி எண்ணவைத்த போலீசார்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய கள்ளக்காதலனின் ஆசையை நிறைவேற்ற, மகளையே தவறாக நடந்துகொள்ள சொன்ன அமுதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, அம்பத்தூரை அடுத்த, அய்யம்பாக்கம் பகுதியில் தனது மகளுடன் வசித்து வருபவர் தான் டிக் டாக் பிரபலம் அமுதா. டிக்டாக், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிறரை ஆபாசமாக பேசி, அதன்முலம் மிகவும் பிரபலமானவர் தான் இந்தப்பெண். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வயதான அமுதா, அதே பகுதியைச் சேர்ந்த ஆண் நண்பரான ராஜேஷ் உடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்தப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து அமுதாவின் மகள் குறித்தும், தந்தை குறித்தும் ஆபாசமாக பேசி இணையத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.
33 வயதே நிரம்பிய அவரின் மகள் கணவரை பிரிந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். தாயின் கள்ளக்காதல் செய்கைகள், ஆபாச பேச்சுக்கள் மகளுக்கு மிகுந்த மனவேதனையைத் தந்துள்ளது. இந்தநிலையில் இதுபற்றி அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் தன் தாய் மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் நாட்டாள் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளார்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. " தன்னுடைய மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை குறித்தும், கணவர் பற்றியும் இந்தகள்ளக்காதல் ஜோடி, ஆபாசமாக பேசி வீடியோக்கள் வெளியிட்டு வந்துள்ளது. அடிக்கடி அமுதா வீட்டிற்கு வந்து சென்ற ராஜேஷ்-க்கு, அவரின் மகள் மீது ஆசை வந்துள்ளது. இதை அமுதாவிடம் கூற, அவளும் ஒப்புக்கொண்டு, தன் காதலனின் ஆசைக்கு இணங்கும் படி பெற்ற மகளையே பலமுறை துன்புறுத்தியுள்ளாள். ஆனால் அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாததால், "உன் அம்மாவிற்கு வயசானதால், உன்னுடன் வாழவே ஆசைப்படுகிறேன்" என நேரடியாக கேட்டுள்ளான் அந்தக் காமக்கொடூரன். இதனால் தன்னுடைய வாழ்க்கையை பற்றி சற்றும் யோசிக்காத தாய் மீது, ஆத்திரம் அடைந்த மகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் கள்ளக்காதல் ஜோடி மீது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
டிக் டாக்-ல் அமுதா அம்மா என்ற ரசிகர்கள் வழக்கமாக இவரை அழைக்க, பெத்த மகளுக்கே கேடு நினைத்த தாய்க்கு சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படியெல்லாமா ஒரு தாய் இருப்பாரா...? என இணையவாசிகள் கமெண்டுகளில் திட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments