டிக்டாக்கில் ஆபாச வீடியோ: 2 பெண்களை ஊரைவிட்டு அடித்து விரட்டிய பொதுமக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக்டாக்கில் ஆபாச வீடியோவை பதிவு செய்து ஊரின் பெயரை கெடுத்த இரண்டு பெண்களை அந்த ஊரின் மக்கள் அடித்து விரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்ற இளம்பெண் டிக்டாக்கில் ஆபாச பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இதனால் சுகந்திக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் கிடைத்ததாகவும் அந்த ஆண் நண்பர்களுடன் சுகந்தி சகஜமாக பழகி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் ஒரு இளைஞருக்கும் சுகந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதையடுத்து அந்த இளைஞர் ஒரு டிக் டாக் வீடியோவில் அதில் சுகந்தியை மட்டுமன்றி கொடுவிலார்புரம் கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களையும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கொடுவிலார்புரம் கிராம மக்கள் சுகந்தி மற்றும் அவருடைய சகோதரியை ஊரில் இருந்து நிரந்தரமாக அடித்து விரட்டினார் இனிமேல் ஊருக்குள் அவர்கள் இருவரும் வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்துள்ளனர் மேலும் இதுகுறித்து காவல்துறையினர் புகார் அளித்த கொடுவிலார்புரம் மக்கள், டிக்டாக் வீடியோவை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments