சூர்யா தேவி VS ரவுடி பேபி சூர்யா....! யுடியூபில் குழாயடி சண்டையிட்ட சர்ச்சையின் சகோதரிகள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விட்டதாக, சூர்யா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் என்ற பகுதியில் சபரிநகரில் வசித்து வருபவர் தான் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி. டிக்டாக்-கில் ஆபாச வீடியோக்கள் மற்றும் கெட்டவார்த்தை பேசி வீடியோ வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தற்போது யுடியூபில் தவறான வார்த்தைகள் பேசியும், அரைகுறை ஆடைகள் அணிந்தும், மற்றவர்களை அசிங்கமா பேசியும், தான் மது அருந்துவது கெத்து என நினைத்தும் வீடியோ பதிவிட்டு வருகிறார். எனக்கு ரசிகர்கள் உள்ளனர் என்று தன்னை தானே பெருமையடித்துக்கொள்ளும் சூர்யா, இவருக்கு அறிவுரை கூறுபவர்களையும் சரமாரியாக திட்டிவருவார்.யுடியுபில் பெரும்பாலும் நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.
நடிகை வனிதாவின் 4-ஆவது திருமணத்தின்போது, அவரை அசிங்கமாக திட்டி மிகவும் பிரபலமானவர் தான் சூர்யா தேவி. இந்நிலையில் "தொடர்ந்து ஆபாசமாக பேசி வரும் ரவுடி பேபியை கொலை செய்ய பணம் அனுப்புங்கள்" என்று சூர்யா தேவி, தனது யுடியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதையடுத்து ரவுடி பேபி சூர்யாவை, வீடு புகுந்து சிலர் "இனி ஆபாசமாக பேசக்கூடாது" என மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன சூர்யா, தன்னை மன்னைசாதிக், சூர்யாதேவி உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல், கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இணையத்தில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் , நள்ளிரவில் சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தன்னை மிரட்டியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வீடு இல்லாததால் முதல்வர் தனக்கு வீடு கட்டித்தர உதவ வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
ரவுடி பேபியின் இந்த நிலையை கண்ட ட்ரோலர்ஸ், தங்களுடைய கண்டென்டுக்கு தீனி கிடைத்து போல,இவரை வைத்து சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com