படிக்க சென்ற இடத்தில் தகாத உறவு: போராட்டத்தில் குதித்த டிக்டாக் பிரபலம்

  • IndiaGlitz, [Sunday,August 08 2021]

தனது சகோதரியின் கணவர் படிக்க சென்ற இடத்தில் தகாத உறவு வைத்திருந்த காரணத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் எஸ்பி அலுவலகம் முன் திடீரென டிக் டாக் பிரபலம் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிக் டாக் மூலம் பிரபலமாகி சமூக சேவை செய்து வருபவர் லியோ தர்மராஜ். இவருடைய சகோதரி திவ்யா என்பவருக்கும் ராஜேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் திவ்யாவின் கணவர் ராஜேஸ்வரன் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்காக மதுரைக்குச் சென்றார்.

அங்கு இன்னொருவரின் மனைவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை அடுத்து இருவரும் ஒன்றாக வாழ தொடங்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த திவ்யா தனது தனது கணவனை தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்தது. அதுமட்டுமின்றி திவ்யாவின் கணவர் ராஜேஸ்வரன் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் லியோ தர்மராஜ் தனது சகோதரி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கொண்டு திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது சகோதரி கணவர் ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தனது சகோதரிக்கு நீதி வழங்க வேண்டுமென்றும் அவர் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியதால் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே லியோ தர்மராஜ் தனது போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அடுத்தடுத்து வரும் 'பீஸ்ட்' அப்டேட்: லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்று அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 'பீஸ்ட்' படத்தின் அப்டேட்டுக்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்தோம். 

வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் 'மாறன்'

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாறன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து: மீண்டு வர வாழ்த்துக்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி மித்ராவுக்கு அரிய வகை நோய் இருந்ததை அடுத்து அவருக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது

விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்!

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள் குறித்த தகவலை

பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி ஒப்பந்தம் இடையே செய்யப்பட்ட இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம்