எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட டிக்டாக் இலக்கியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்து அவரது மகள் பாடிய என்ஜாய் என்ஜாய் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் ஒரு சில நாட்களில் இந்த பாடலுக்கு பல மில்லியன் பார்வையாளர்கள் யூடியூபில் கிடைத்தனர் என்பதும் தெரிந்ததே.
மேலும் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர் என்பதும் அந்த அளவிற்கு இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிக்டாக்கில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்த இலக்கியாவும் என்ஜாய் என்ஜாய் பாடலுக்கு வேற லெவலில் கவர்ச்சி நடனமாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவு பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப் படங்களில் நடிப்பதற்காக படுக்கையை கூட பகிர்ந்து கொண்டதாக சமீபத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த டிக்டாக் இலக்கியா ’நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பதும் அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
— chettyrajubhai (@chettyrajubhai) March 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments