அஜித்தின் 'வலிமை' படத்தில் டிக்டாக் பிரபலம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் பொங்கல் தினம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் இந்த வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் டிக் டாக் பிரபலம் வைஷ்ணவி சைதன்யா என்பவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்துடன் அவர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருவதை அடுத்தே இந்த செய்தி பரவி வருகிறது என்பதும் இருப்பினும் ‘வலிமை’ படம் ரிலீஸ் ஆன பின்னரே டிக்டாக் பிரபலம் வைஷ்ணவி இந்த படத்தில் நடித்திருக்கின்றாரா? என்பது தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.
I'm Truly Blessed and So Happy to have shared the Screen Space with #ThalaAjith Sir. Ajith Sir is soo Down to earth and very lovely and caring person. His presence make the whole #Valimai Set on Fire ????. Hope you all Enjoyed #NaangaVeraMaari Song. #29YrsOfInvincibleTHALA ??♥️?? pic.twitter.com/nluuMBZ7tJ
— Vaishnavi Chaitanaya (@VaishnaviOffI) August 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments