கள்ளக்காதலால் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியை ஞாபகம் இருக்கா? அவரது தம்பி எடுத்த விபரீத முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்போது எடுத்துள்ள விபரீத முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்றத்தூர் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற 7 வயது மகனும் கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர். இந்த நிலையில் டிக்டாக்கில் பிரபலமாக இருந்த அபிராமிக்கு, பிரியாணி கடையில் வேலை செய்த ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ள காதல் கண்ணை மறைத்த காரணத்தினால் தனது இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனுடன் அபிராமி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அபிராமியை கைது செய்தனர். தற்போது அவர் மீது குழந்தைகளை கொலை செய்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பதும், இந்த வழக்கில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அபிராமிக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அபிராமியின் சகோதரர் பிரசன்னா மணிகண்டன் என்பவர் மாங்காடு பகுதியில் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டார் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த போதுதான் இரண்டு கொலைகளை செய்த அபிராமின் சகோதரர் இவர் என்பது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
தனது அக்காவின் செயலால் தான் தன்னுடைய திருமணம் நின்று விட்டதை அறிந்த பிரசன்னா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அபிராமியின் கள்ளக்காதல் அவருடைய குழந்தைகளை மட்டுமின்றி அவரது சகோதரரையும் பலிவாங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com