டிக்-டாக் நிறுவனத்துக்கு விழுந்த பலத்த அடி!!! புள்ளி விவரங்களை வெளியிட்ட சீன ஊடகம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிக்-டாக், ஹாலே ஆப் முதற்கொண்டு 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. சீன செயலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என மத்திய அரசு இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனால் சீனாவில் பெரும்பலான தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதள பாதாளத்திற்குச் சென்றன. அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் செயல்பாடு இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த மே 25 ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவம் குவிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகின்றன. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் கடந்த ஜுன் 15 இருநாட்டு இராணுவ வீரர்களும் கல்வான் பகுதியில் மோதிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை அடுத்து இந்தியாவின் தரப்பில் சீன இராணுவ வீரர்களோடு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப் பட்டது. ஆனாலும் முடிவுகள் எட்டப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை. இந்நிலையில் எல்லைப் பகுதியில் இருநாட்டு இராணுவங்களும் தொடர்ந்து படைகளை குவித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லைப் பகுதியில் நிலவும் பதட்டம் தற்போது வணிக ரீதியாகவும் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. மத்திய அரசு 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்து இருப்பதால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் இந்தியா இந்த தடையை திரும்ப பெற வேண்டும் எனவும் சீனா கூறிவருகிறது. டிக்-டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் என்ற நிறுவனத்திற்கு மட்டும் தற்போது 45 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படும் என்ற கணிப்பை அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் ஊடகம் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
டிக்-டாக் செயலியை அமெரிக்கர்களைத் தொடர்ந்து இந்திய மக்கள்தான் அதிக அளவில் தரவிறக்கம் செய்துள்ளனர். இதனால் டிக்-டாக்கின் செயலியின் தலைமை நிறுவனம் கடுமையான பாதிப்பை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் வரையில் 11.2 கோடி இந்தியர்கள் டிக்- டாக் செயலியை தரவிறக்கம் செய்து உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கர்களை விட இந்தியர்கள் இரண்டு மடங்கு அதிகமாக டிக்-டாக்கை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மூதலீட்டு வர்த்தகங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் குளோபல் டைம்ஸ் செய்தி தகவல் கூறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments