நீதிமன்ற உத்தரவு எதிரொலி: டிக்டாக் செயலியை முடக்கியது கூகுள் பிளேஸ்டோர்
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக்டாக்’ செயலியில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்ற குரல் ஒலித்து வந்தது
இதுகுறித்த வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் ‘டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது
இந்த நிலையில் டிக் டாக் செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் முடக்கியுள்ளது. இதனையடுத்து கூகுள் பிளேஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை இந்தியாவில் இனி யாரும் தரவிறக்கம் செய்ய முடியாது. எனினும், ஆப்பிள் தளங்களில் டிக் டாக் செயலி இன்னும் உள்ளது. இந்த செயலியை நீக்குவது குறித்து ஆப்பிள் நிறுவனம் கருத்து கூற மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout