நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்தா? திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

 

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி, அந்த கல்லூரியில் படித்து வரும் நான்கு மாணவிகளை தவறான பாதையில் கொண்டு செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி ஒருபுறமும், கவர்னர் நியமனம் செய்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்னொரு புறமும் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் உள்பட பல பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. எனவே நிர்மலாதேவி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்களின் பெயர்களை கூறும் முன் அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளனர். ஏற்கனவே நிர்மலாதேவியில் உயிருக்கு ஆபத்து என அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.