'டிக்கெட் டு பினாலே கடைசி டாஸ்க்கில் திடீர் திருப்பம்.. 5 டிக்கெட்டுக்களை வெல்பவர் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் பினாலே என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலையில் நிக்சன் தான் அதிக டிக்கெட்டுகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவர் ஏழு டிக்கெட்டுகளை பெற்றுள்ளதால் அவர் முன்னணியில் உள்ளார் என்பதும் அவருக்கு அடுத்தபடியாக பூர்ணிமா, மாயா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிக்கெட் டு பினாலே கடைசி டாஸ்க் இன்று நடத்தப்படுவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐந்து டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பதால் நிக்சன் மட்டுமின்றி மாயா, பூர்ணிமா மற்றும் விஷ்ணு ஆகியவர்களுக்கும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் ஒரு போர்டில் அனைத்து போட்டியாளர்களும் கைகளை வைக்க வேண்டும். இறுதிவரை கையை எடுக்காமல் இருக்க வேண்டும். போர்டில் இருந்து கையை எடுப்பவர்கள் போட்டியிலிருந்து விலகுபவர்களாக அறிவிக்கப்படும் என்பதுதான் கடைசி டாஸ்க் என பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு பக்கம் உள்ள போர்டில் விஷ்ணு, மணி, ரவீனா, தினேஷ் ஆகியவர்கள் கைவைக்க, இன்னொரு போர்டில் மாயா, பூர்ணிமா, நிக்சன், விசித்ரா ஆகியவர்கள் கை வைத்துள்ளனர். மணிக்கணக்கில் கையை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இரு தரப்பில் உள்ள போட்டியாளர்களுக்கும் கை வலிக்கும் நிலையில் யார் கையை எடுத்து விடுவார்கள்? கடைசி வரை கையை வைத்து ஐந்து டிக்கெட்டுகளை யார் பெறுவார்கள்? என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்கெட் டு பினாலே கடைசி டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் போட்டியாளர் யார் என்பதை அறிய பார்வையாளர்களும் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments