அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு இலவச டிக்கெட்: நாளை வெளியாகும் படக்குழு அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என நாளை வெளியாகும் திரைப்படத்தின் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விமல் நடிப்பில், மைக்கேல் ராஜா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’போகுமிடம் வெகுதூரம் இல்லை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் குழுவினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது நாளை முதல் நாள் மட்டும் இந்த படத்தின் டிக்கெட் அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இலவசம் என அறிவித்துள்ளது. அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தங்கள் அடையாள அட்டையை 9884849790 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பினால் இலவச டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என படக்குழு அறிவித்துள்ளது.

விமல் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் கருணாஸ், நரேன், பவன், அருள் தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

த்ரிஷ்யம் 3ஆம் பாகத்திற்கான ஐடியா பிரபல பாடகியிடம் இருந்து கிடைத்தது: ஜித்து ஜோசப்.

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம்' மற்றும் 'த்ரிஷ்யம் 2' ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில்

ஏற்கனவே நான் ஒரு CM, இனி நானும் ஒரு PM.. மகன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஷோபா..!

ஏற்கனவே நான் CM, என்றும் இனி நான் PM என்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு பணம் கொடுத்தாரா நெல்சன் மனைவி.. அவரே அளித்த விளக்கம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளியின் கூட்டாளி என்று கூறப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இது

தவெக கொடியேற்றும் விழாவில் விஜய்யின் அப்பா-அம்மா வருகை.. மனைவி குழந்தைகள் வரவில்லையா?

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகிய

கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.. கொடியேற்றும் விழாவில் விஜய் பேச்சு..!

தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம். சந்தோஷமா, கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம். எல்லோரும்