புரட்சி தளபதி விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர், என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரம், புரட்சி தளபதி விஷால் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த இனிய பிறந்த நாளில் IndiaGlitz சார்பில் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
சினிமா பின்னணியில் இருந்து திரையுலகிற்கு வந்தாலும் விஷாலின் பாதை கரடுமுரடானது. வெற்றி, தோல்வி என மாறி மாறி பெற்று வந்த விஷால், விடாமுயற்சியால் இன்று கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
நடிகர் சங்கம் என்று பெயரளவுக்கு மட்டுமே இருந்த நிலையில் நலிவடைந்த நடிகர்களுக்கு உதவும் சங்கமாக மாற பெரும் முயற்சி எடுத்தவர் விஷால். தோற்கடிக்கவே முடியாது என்ற நிலையில் இருந்த சரத்குமார், ராதாரவியை தோற்கடித்து இளைஞர்களின் கையில் நடிகர் சங்க நிர்வாகத்தை கொண்டு வந்தவர்.
அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குழப்பங்கள் இருந்ததால் அதையும் சீரமைக்க பல எதிர்ப்புகளையும் தாண்டி கைப்பற்றினார். தற்போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஒன்றுடன் ஒன்று புரிதலுடன் வீரநடை போட்டு வருகிறது. பல முக்கிய முடிவுகள் திரையுலகினர்களின் நன்மைக்காக எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக திரையுலகினர்களை பயமுறுத்தி வரும் ஆன்லைன் பைரஸிக்கு எதிராக விஷால் எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்த பிரச்சனைக்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். அவருடைய நல்ல எண்ணம், விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவை விஷாலை சினிமாத்துறையில் மட்டுமின்றி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட வேண்டும் என்று இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments